Paristamil Navigation Paristamil advert login

அனிருத் 'மனிகே மகே ஹிதே பாடலைக் காப்பியடித்தாரா அனிருத்?

அனிருத் 'மனிகே மகே ஹிதே பாடலைக் காப்பியடித்தாரா அனிருத்?

6 ஆவணி 2024 செவ்வாய் 14:26 | பார்வைகள் : 695


தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். அதிகமான 100 மில்லியன் பாடல்களைக் கொடுத்தவர். அவரது இசையில் வரும் சில சூப்பர் ஹிட் பாடல்கள் குறித்து அவ்வப்போது சர்ச்சையும் கிளம்பும். காப்பியடித்து பாடல்களை உருவாக்குகிறார் என்பதுதான் அந்த சர்ச்சை

அவரது இசையில் தற்போது உருவாகி வரும் 'தேவரா' படத்தின் இரண்டாவது 'சுட்டாமல்லே' என்ற பாடல் நேற்று வெளியானது. தெலுங்கு தவிர மற்ற மொழிகளிலும் சேர்த்து இப்பாடல் யு டியுப் தளத்தில் 33 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

இந்நிலையில் இந்தப் பாடல் சிங்களப் பாடலான 'மனிகே மகே ஹிதே' என்ற பாடலின் காப்பி என ரசிகர்கள் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளனர். 2020ம் ஆண்டில் வெளிவந்த அந்தப் பாடல் 21 மில்லியன் பார்வைகளை யு டியுபில் பெற்றுள்ளது. அந்தப் பாடலுக்கு சமத் சங்கீத் இசையமைக்க சதீஷன் என்பவர் பாடியிருந்தார். அதற்கடுத்து 2021ம் ஆண்டில் அதன் 'கவர்' பாடல் ஒன்று வெளியானது. அது யு டியுபில் 249 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. அதற்கு சமத் சங்கீத் இசையமைக்க, யோஹானி, சதீஷன் பாடியிருந்தனர்.

அந்தப் பாடலைக் காப்பியடித்துதான் அனிருத் 'தேவரா' படத்தின் 'சுட்டாமல்லே' பாடலை உருவாக்கியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் 'டிரோல்' செய்து வருகிறார்கள்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்