பிக் பாஸ் நிகழ்ச்சியியல் இருந்து விலகிய கமல்ஹாசன்
6 ஆவணி 2024 செவ்வாய் 14:16 | பார்வைகள் : 756
பிக் பாஸ் சீசன் 1 முதல் ஏழு சீசன் 7 வரை தொகுத்து வழங்கிய உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்த சீசனை தொகுத்து வழங்கவில்லை என அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியில் கடந்த ஏழு ஆண்டுகளாக ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் விரைவில் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் சற்று முன் கமல்ஹாசன் தனது சமூக வலைதளத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நிலையில் இந்த பயணத்தில் இருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனது சினிமா பணிகள் இருப்பதன் காரணமாக பிக் பாஸ் தமிழ் அடுத்த சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை. உங்கள் இல்லங்களில் உங்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் என் மீது பொழிந்தீர்கள், அதற்காக நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சியாக மாற்றுவதற்கு போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் தான் அடிப்படை காரணம்.
தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன், என்னுடைய கற்றலையும் நேர்மையாக பகிர்ந்து கொண்டேன், இந்த கற்றல் அனுபவத்திற்கு நான் எப்போதும் நன்றி உடையவனாக இருப்பேன்.
இறுதியாக விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் குழுவிற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் இன்னொரு வெற்றி சீசன் ஆக இருக்கும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்.கமல்ஹாசனின் இந்த அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாக வருகிறது.