Paristamil Navigation Paristamil advert login

ஜாம்பவான் முரளிதரன், மெண்டிஸுக்கு அடுத்து சாதனை படைத்த வீரர்

ஜாம்பவான் முரளிதரன், மெண்டிஸுக்கு அடுத்து சாதனை படைத்த வீரர்

6 ஆவணி 2024 செவ்வாய் 09:19 | பார்வைகள் : 439


இலங்கை வீரர் வாண்டர்சே இந்திய அணிக்கு எதிராக 6 விக்கெட்டுகளை வீழ்த்திய பெருமையை பெற்றுள்ளார்.

இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இப்போட்டியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் ஜெஃப்ரே வாண்டர்சே (Jeffrey Vandersay) 33 ஓட்டங்கள் கொடுத்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

இது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு எதிரான இலங்கை வீரர் ஒருவரின் மூன்றாவது சிறந்த பந்துவீச்சு ஆகும். 

இதற்கு முன்பு முத்தையா முரளிதரன் 30 ஓட்டங்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளும், அஜந்தா மெண்டிஸ் 13 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தனர்.    

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்