வெங்காயச் சாறு முடி வளர்ச்சிக்கு உதவுமா?
5 ஆவணி 2024 திங்கள் 11:43 | பார்வைகள் : 946
முடி வளர்ச்சிக்கு சின்ன வெங்காயம் உதவும் என்பது நவீன கால குறிப்பு அல்ல. காலங்காலமாக கடைப்பிடிக்கபட்டு வரும் வீட்டு வைத்திய குறிப்புதான். முடி கொட்டும் பிரச்சனை உள்ள நபர்கள் அல்லது பொடுகு தொல்லை போன்ற பாதிப்பு உள்ளவர்கள் நிச்சயமாக சின்ன வெங்காயத்தை பயன்படுத்தலாம். பழங்காலத்தில் இருந்தே சின்ன வெங்காயம் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.
இது வேர் பகுதியை வலுப்படுத்தி முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இதற்கு முக்கிய காரணம் சின்ன வெங்காயத்தில் உள்ள சல்பர் என்ற வேதிப்பொருள், இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும் சின்ன வெங்காயத்தில் இயற்கையாகவே பாக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இது பொடுகு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. எனவே அவை முடி பராமரிப்புக்கான இயற்கையான தேர்வாக அமைகின்றன.
வெங்காய சாறு ஏன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது:
சல்பர் நிறைந்தது: இது முடியை வலுப்படுத்த உதவுகிறது மற்றும் முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது.
பாக்டீரியா எதிர்ப்பு: இது முடி உதிர்தலுக்கு பங்களிக்கும் தொற்றுகளை எதிர்த்துப் போராடுகிறது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: இவை முடி மற்றும் உச்சந்தலையை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன.
இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது: வெங்காய சாறு முடியின் மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது, மற்றும் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.