Paristamil Navigation Paristamil advert login

பிரெஞ்சு மொழியில் வார்த்தை விளையாட்டு!!

பிரெஞ்சு மொழியில் வார்த்தை விளையாட்டு!!

8 மார்கழி 2021 புதன் 11:30 | பார்வைகள் : 28172


தமிழை தாய் மொழியாக கொண்டுள்ள எமக்கு, தமிழில் உள்ள வார்த்தை விளையாட்டுக்கள் நீங்கள் அறிந்ததே. ஒரே ஒலியை கொண்ட வார்த்தைகளை அருகருகே போட்டு அதை வேகமாக சொல்லி எங்களில் பலர் விளையாடியிருப்போம்.

'கடற்கரையில உரல் உருளுது..' , 'யார் தைச்ச சட்டை... தாத்தா தைச்ச சட்டை.! இப்பிடி பல.

உங்களுக்குத் தெரியுமா?! பிரெஞ்சு மொழியிலும் இதுபோன்ற வார்த்தைகள் உள்ளன. சிறிய சிறிய வித்தியாசங்களை கொண்டு உருவாக்கப்பட்ட வசனங்கள் மிகவும் பிரபலம்.

உதாரணத்துக்கு இதை பாருங்கள். "Si mon tonton tond ton tonton, ton tonton sera tondu"

இதை உச்சரித்து பாருங்கள்... நீங்கள் புன்னகைப்பது புரிகிறது.

பிரெஞ்சில் இதுபோல பல வாக்கியங்கள் உள்ளன.

"Les chaussettes de l’archiduchesse, sont-elles sèches ? Archi-sèches" மிக பிரபலமான ஒன்று.

ஐந்து நாய்கள் ஆறு பூனைகளை வேட்டையாடின. இதை பிரெஞ்சில் "Cinq chiens chassent six chats" என சொல்லலாம்.

"As-tu vu le vert ver allant vers le verre en verre vert ?"

"Ces six saucissons-secs-ci sont si secs qu’on ne sait si s’en sont" - இதை நீங்கள் சரியான உச்சரிப்பில் வாசித்தால் உங்களை நீங்களே ஒருதடவை பாராட்டிக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற பல வாக்கியங்கள் பிரெஞ்சு மொழியில் மிகவும் பிரபலம். உங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லி கொடுங்கள்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்