Paristamil Navigation Paristamil advert login

முதல் மிஸ்.பிரான்ஸ்! - ஒரு சுருக்கமான வரலாறு!

முதல் மிஸ்.பிரான்ஸ்! - ஒரு சுருக்கமான வரலாறு!

16 மார்கழி 2021 வியாழன் 13:30 | பார்வைகள் : 54944


கடந்த வாரத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான மிஸ்.பிரான்ஸ் அழகிப்போட்டி இடம்பெற்றது வாசர்கள் அறிந்ததே. முதன் முதலாக பிரான்சில் அழகிப்போட்டி எப்போது இடம்பெற்றது என உங்களுக்குத் தெரியுமா..? இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொள்ளலாம்.

பிரான்சுக்கென முதல் அழகிப்போட்டி 1920 ஆம் ஆண்டு இடம்பெற்றது. “La plus belle femme de France” எனும் பெயரில் இந்த அழகிப்போட்டி இடம்பெற்றது. பத்திரிகையாளர் Maurice de Waleffe இந்த முதல் அழகிப்போட்டியை ஒழுங்கமைத்தார்.

பத்திரிகையிலும், சுவரொட்டிகள் மூலமும் இந்த ‘பிரான்சுக்கான அழகி’ போட்டிக்கு தேடுதல் வேட்டை இடம்பெற்றது.

சொன்னால் நம்ப மாட்டீர்கள்… மொத்தமாக 1.700 பெண்கள் இந்த போட்டிக்கு தங்கள் புகைப்படங்களுடன் விண்ணப்பித்திருந்தார்கள்.

அவர்களில் இருந்து 49 பேர் இறுதிப்போட்டியாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

பின்னர் அவர்களில் இருந்து 7 பெண்கள் இறுதிப்போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், அவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் படி நடுவர்களிடம் கோரப்பட்டது.

அதில் இறுதி வெற்றியாளராக ஏகோபித்த வாக்குகளுடன் தெரிவானவர் தான் Agnès Souret. பிரான்சின் முதல் அழகி.

ஆஹா.. புகழோ புகழ். Agnès Souret இன் புகைப்படத்தை அச்சிடாத பத்திரிகைகளே இல்லை. கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் அவர் புகழின் உச்சியில் வைத்து கொண்டாடப்பட்டார்.

இவர் ஒரு நடன மங்கை. இவர் நடனம் புரியும் க்ளப்புகளில் கூட்டம் அள்ளியது. இவரை முன்பதிவு செய்து தங்கள் விடுதிகளில் ஆட வைக்க விடுதி உரிமையாளர்கள் பணத்தினை வாரி இறைத்தனர். எங்கும் வசூல் மழை.

பின்னர் இவரது புகழ் பிரித்தானியாவுக்கும் பரவியது. பல திரைப்படங்களிலும் நடித்தார்.

உலக சினிமா நடிகையோ.. அல்லது அழகியோ,… அவர்களுக்கெல்லாம் ஒரே விதிதான். புகழ் உச்சியின் இருந்தாலும் சொந்த வாழ்க்கை அத்தனை மகிழ்ச்சியாக அமைந்ததில்லை. Agnès Souret இதற்கு விதிவிலக்கல்ல.

தனது 26 ஆறாவது வயதில் ஒருநாள் வாயில் இருந்து இரத்தம் இரத்தமாக வாந்தி எடுத்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவருக்கு Peritonitis எனும் கொடிய நோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அடிவயிற்றில் கேன்சர் என சொல்லலாம். செப்டம்பர் 30 ஆம் திகதி அவர் தனது 26 ஆவது வயதில் சாவடைந்தார்.

புகழின் உச்சத்தில் இருந்த அவரை காலன் அழைத்துச் சென்று கையோடு வைத்துக்கொண்டார்.

சுபம்.  

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்