கடிதத்துக்கு காப்புறுதி! - தபாலங்களில் உள்ள வசதிகள்!
6 தை 2022 வியாழன் 10:30 | பார்வைகள் : 58472
பிரெஞ்சு தபாலகங்களில் வாடிக்கையாளர்களுக்கு தெரியாத பல வசதிகள் உள்ளன. இன்றைய பிரெஞ்சு புதினத்தில் அவை குறித்து சில தகவல்களை பார்க்கலாம்.
நீங்கள் கடிதம் ஒன்றை அனுப்புகின்றீர்கள். அதன் மதிப்பு 5,000 யூரோக்கள் என்றால் உங்களுக்கு நெஞ்சு படபடப்பாக இருக்கும். “இந்த கடிதம் சென்று சேருமா… இடையில் எவரேனும் உருவி விடுவார்களா?” என்றெல்லாம் குழப்பம் எழும். ஆனால் அப்படியெல்லாம் எதுவும் நடக்காது.
இருந்தாலும், உங்களுக்கு அப்படி ஒரு சந்தேகம் இருந்தால், நீங்கள் உங்கள் கடிதத்தை ‘காப்புறுதி’ செய்யலாம். இந்த காப்புறுதிக்கு பெயர் Valeur Déclarée Internationale.
உங்களது கடிதம் 5000 யூரோக்கள் வரை இருந்தால், தபாகலத்திலேயே காப்புறுதியை எடுத்துக்கொள்ளலாம். இதற்காக நீங்கள் €20.90 யூரோக்கள் செலுத்த வேண்டும்.
ஐரோப்பாவுக்குள் அனுப்பப்படும் கடிதங்களுக்கு மாத்திரமே காப்புறுதி செய்யப்படும்.
எந்த வித சந்தேகமும் இன்றி உங்கள் கடிதம் சென்றடையும். இல்லாவிட்டால் கடிதத்தின் பெறுமதி தொகை செலுத்தப்படும்.
அட இது நல்லா இருக்கே!
**
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரிந்து சென்றதில் இருந்து, பிரான்சில் இருந்து செல்லும் அல்லது பிரான்சுக்கு வரும் கடிதங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
பிரெஞ்சு சுங்கவரித்துறையினரை அனுமதித்தன் பின்னரே உங்கள் கடிதம் வரும் அல்லது சென்றடையும். ஜனவரி 2021 ஆம் ஆண்டில் இருந்து இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.
அடுத்தமுறை பிரித்தானியாவில் இருக்கும் அத்தைக்கு எதையாவது அனுப்பும் முன் அவதானமாக இருங்கள். வரி சொலுத்தவும் நேரிடும்.
*****
பிரான்சில் இருந்து வெளியேறி திடீரென வேறு ஒரு நாடில் மூன்று மாதங்களுக்கு வசிக்க வேண்டிய தேவை வந்துவிட்டால், உங்களுக்குரிய கடிதங்கள் அனைத்தும் ஆளில்லா வீட்டுக்கு விநியோகம் ஆகும். அல்லது உள்ளூர் தபாலகத்தில் தேங்கிவிடும்.
இந்த சூழ்நிலையை சமாளிக பிரான்சில் அசத்த வசதி ஒன்று உள்ளது. அது நாளை…..