Paristamil Navigation Paristamil advert login

போக்குவரத்து விதி

போக்குவரத்து விதி

25 ஆவணி 2024 ஞாயிறு 07:51 | பார்வைகள் : 4069


ஒருவர் காரில் தன் மனைவி , அம்மா எல்லோருடனும் சென்று கொண்டிருந்தார் . நீண்ட நேரமாக அவரை ஒரு பொலிஸ் ஜீப் தொடர்ந்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்துக்கு பிறகு போலிஸ் ஜீப் அவர் காரை முந்திக்கொண்டு சென்று , அவர் கார் முன் நின்றது.

இறங்கி வந்த பொலிஸ் , அவரிடம் 'குட் ஈவ்னிங் சார்..

அவர்  " குட் ஈவ்னிங், ஏதாவது பிரச்சனையா? "

பொலிஸ்,  "நாங்கள்  உங்கள் காரை அரை மணி நேரமாக கவனித்து வருகிறோம்...... நீங்கள் போக்குவரத்து விதிகளை மீறாமல், ஸ்பீட் லிமிட்டை ஒரு மைல் கூட அதிகரிக்காமல், சக டிரைவர்களை மதித்து காரை ஓட்டிய விதத்தை நாங்கள் பாராட்டுகின்றோம்." 

அதனால், சாலை பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு, உங்களை சிறந்த டிரைவராக தேர்வு செய்து, 10,000 ரூபாய்க்கான இந்த செக்கை அன்பளிப்பாக கொடுக்கிறோம் பெற்றுக் கொள்ளுங்கள்'.

அவரும் சந்தோஷமாக ஒரு பெருமூச்சுவிட்டு விட்டு சொன்னார், "இந்த பணத்தை வைத்து எப்படியாவது டிரைவிங் லைசன்ஸ் கட்டாயம் எடுத்துடனும் "என்று சொன்னார்.

பொலிஸ் ஒருமாதிரி பார்க்க, உடனே அவரின் மனைவி   "சாரி சார் தப்ப நினைக்க வேண்டாம், அவர் குடிச்சிட்டு உளறுகிறார்"' என்றார்.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த அவரின் காது கேட்காத அம்மா சொன்னார்,   "நான் அப்பவே சொன்னேன் கேட்டியா, திருட்டு காரை எடுத்துகிட்டு வந்ததால், இப்ப எல்லோரும் போலிஸில் மாட்டிகிட்டோம்......"

வர்த்தக‌ விளம்பரங்கள்