புறாவும் எறும்பும் கதை
24 ஆவணி 2024 சனி 09:25 | பார்வைகள் : 457
ஒரு காட்டு பகுதியில் ஒரு புறா கூட்டம் வாழ்ந்துட்டு வந்துச்சாம்
அந்த புறா கூட்டம் ஒரு வயசான புறாவோட தலைமைல வாழ்ந்துட்டு வந்துச்சாம்
அந்த புறாக்கள் எப்போதும் அந்த வயசான புறாவோட பேச்சக்கேட்டு நல்ல புள்ளைங்களா இருந்ததால அந்த புறாக்கள் எப்போதும் சந்தோசமா இருந்தன
அந்த வயசான புறாக்கு ரொம்ப அனபவம் இருந்ததால் அந்த புறா கூட்டத்தை எப்பவும் கண்க ராணிச்சுகிட்டே இருக்கும்
அந்த புறாக்கள் தினமும் காலையில் எந்திரிச்சதும் உணவு தேடி பறக்க ஆரம்பிச்சுடும்
காட்டுப்பகுதியில் உணவு தேடும்போது அந்த வயசான புறா சொல்ற இடத்துல இருக்குற தானியங்களதான் அந்த புறாக்கள் சாப்பிடும்
இப்படி இருந்த அந்த புறாக்கூட்டம் ஒரு நாள் உணவு தேடி ஒரு புதிய காட்டுப்பகுதியில் பறந்து போச்சு
அது புதுக்காடுங்கிறதுனால எங்க தானியம் கிடைக்கும்னு சரியா தெரியல
ரொம்ப தூரம் பறந்த அந்த புறாக் கூட்டத்துல இருந்த இளவயது புறாக்கள் ரொம்ப சோர்வடைஞ்சு போச்சு
அந்த நேரத்துல ஒரு பாறைப்பகுதியில தானியங்கள் நிரைய கொட்டி கிடக்குரத பாத்துச்சுங்க அந்த
இளைய புறாக்கள்
உடனே அந்த தானியங்கள் எடுத்து சாப்பிட அவசரமா கீழ இறங்க பாத்துச்சுங்க
அத பாத்த அந்த வயசான புறா நில்லுங்க ஒரு நிமிசம்னு அந்த இளை புறாக்கள் தடுத்துச்சு
பாறை பகுதியில் தானியங்கள் செயற்கையா விழுந்து கிடக்கு,
அக்கம் பக்கத்துல செடியோ கெ
டியோ மரமே எதுவுமே இல்லாம இந்த தானியங்கள் பாற மேல கிடக்குரது எனக்கு சந்தேகமா
இருக்குனு சொல்லுச்சு
நீண்ட நேரம் பறந்து வந்ததால கலப்பா இருந்த இளைய புறாக்கள் அதோட பேச்சக் கேக்காம அந்த தானியங்கள் எடுக்க ஆரம்பிச்சது
திடீர்னு அந்த தானியங்களுக்கு அடியில் இருந்த வலையில் அந்த புறாக்களோட கால் மாட்டிக்கிடுச்சு
உடனே பயந்து போன அந்த இளைய புறாக்கள் அடடா ஒங்க பேச்ச கேக்காம இப்படி மாட்டிகிட்டேமெனு ரொம்ப வருத்தப்பட்டுச்சு
இதப்பாத்த அந்த வயதான புறா கவலப்படாதீங்க நீங்க எல்லாரும் ஓங்க பலத்த உபயோகிச்சிங்கன்னா இந்த வலைய சுலபமா தூக்கிட முடியும்
எல்லாரும் ஒரேநேரத்துல சிரகடிச்சு பறங்கனு சொல்லுச்சு
அதக்கேட்ட அந்த புறாக்கள் உடன மொத்தமா அந்த வலையத் தூக்கிகிட்டு பறந்து போச்சுங்க