‛கைதி 2' படத்தில் கமல், விஜய், சூர்யா.....
14 ஆடி 2024 ஞாயிறு 14:33 | பார்வைகள் : 1960
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ’கைதி’ திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தற்போது லோகேஷ் கனகராஜ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் நிலையில் இந்த படத்தை முடித்தவுடன் லோகேஷ் கனகராஜ் ’கைதி 2’ படத்தை தான் தொடங்கப் போகிறார் என்றும் விரைவில் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் லோகேஷ் நாகராஜின் படங்களில் LCU காட்சிகள் இருக்கும் என்ற நிலையில் ’கூலி’ படத்தில் எந்த LCU காட்சிகள் இருக்காது என்றும் கூறப்பட்டது. அதே நேரத்தில் ’கைதி 2’ திரைப்படம் நிச்சயம் ஒரு LCU படம் தான் என்றும் இந்த படத்தில் கமல்ஹாசன், விக்ரம் கேரக்டரில் தோன்ற இருப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல் சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டரும் ’கைதி 2’படத்தில் இருக்கும் என்றும் தெரிகிறது.
தளபதி விஜய்யின் மாஸ்டர் கேரக்டர் ’கைதி 2’ படத்தில் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் விஜய் வாய்ஸ் ஓவர் கொடுக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்க இருப்பதாகவும் அடுத்த ஆண்டு இறுதியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது.