Paristamil Navigation Paristamil advert login

தலைவர் பதவிக்கு தகுதி பெற்றார் இன்றைய பிரதமர் Gabriel Attal.

தலைவர் பதவிக்கு தகுதி பெற்றார் இன்றைய பிரதமர் Gabriel Attal.

13 ஆடி 2024 சனி 11:13 | பார்வைகள் : 4591


பிரான்சில் நடந்து முடிந்த தேர்தலின் பின்னர் பிரான்சின் தேசிய நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர் பதவிக்கான தேர்தல் அவரவர் கட்சிக்குள் நடந்து வருகிறது. இதில் ஆழும் கட்சியான Renaissance கூட்டணி கட்சிகளின் நாடாளுமன்றத் தலைவரை தெரிவுசெய்யும் போட்டி நேற்று அறிவிக்கப்பட்டு மின்னஞ்சல் வாக்குகளை செலுத்தும் ஏற்பாடுகள் ஆரம்பித்தன. 

முதலில் முன்னாள் பிரதமர் Elisabeth Borne, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் Gérald Darmanin, மற்றும் சில நாட்களில் பதவியிளக்கவுள்ள இன்றைய பிரதமர் Gabriel Attal ஆகியோரின் பெயர்கள் உச்சரிக்கப்பட்டன, ஆனால் கடைசியில் Gabriel Attal மட்டுமே களத்தில் தனித்து நின்றார்.

நாடாளுமன்ற தேர்தலில் ஆழும் Renaissance கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட்டு Hauts-de-Seine பகுதியில் தெரிவான பிரதமர் 98 வாக்குக்களில் 84 வாக்குகளை பெற்று 'Renaissance' கூட்டுக் கட்சியின் நாடாளுமன்ற தலைவராக தெரிவாகியுள்ளார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்