பீர் கேனை திறக்க முதலையின் உதவியை நாடிய இளைஞர்

6 ஆடி 2024 சனி 10:52 | பார்வைகள் : 3052
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் படகில் சென்ற வாலிபர் ஒருவர் பீர் கேனை திறப்பதற்காக முதலையின் உதவியை நாடியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
27 விநாடிகள் கொண்ட அந்த வீடியோவில் வாலிபர் ஒருவர் தனது கையில் ஒரு பீர் கேனுடன் அமர்ந்துள்ளார்.
அந்த கேனை திறக்க கஷ்டப்படும் அவர் படகில் இருந்து உணவு பொருளை ஆற்றில் வீசுவது போல காட்சி உள்ளது. அப்போது படகு அருகே ஒரு முதலை வருகிறது.
இந்நிலையில் முதலை படகை நெருங்கியதும் அந்த வாலிபர் முதலையின் வாயில் பீர் கேனை வைப்பது போன்றும், முதலை அதை கடித்ததால் பீர் கேனை திறப்பது போன்றும் காட்சிகள் உள்ளது.
பின்னர் அந்த பீர் கேனை வாலிபர் தனது நண்பர்களுக்கு கொடுக்க அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.
'கேட்டரை கேன் ஓப்பனராக பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் பகிரப்பட்ட இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் பரவி 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றது.