Paristamil Navigation Paristamil advert login

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

2 ஆவணி 2024 வெள்ளி 13:00 | பார்வைகள் : 391


ஒரு கிராமத்துல ஒரு பன்றி குடும்பம் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.

அந்த குடும்பத்துல மூணு பன்றி குட்டிங்க இருந்துச்சு, அதுல முதல் பன்னி எப்பவும் டிவி பாத்துகிட்டே இருக்கும், ரெண்டாவது பன்னி எப்பவும் வீடியோ கேம் விளையாடிகிட்டே இருக்கும், மூணாவது பன்னி எப்பவும் செல்போன் நோண்டிகிட்டே இருக்கும்.

இத பாத்த அப்பா பன்னிக்குட்டி இந்த மூணு பன்னிகளையும் கேட்ட பழக்கங்களை விட்டு எப்படி காப்பாத்துறதுன்னு யோசிச்சாறு

அதனால ஒவ்வொரு பன்னியா தனி தனியா கூப்பிட்டு பேசுனாரு.

முதல் பன்னு சொல்லுச்சு என்னோட தம்பிங்க எப்பவும் கெட்ட பழக்கங்களா வச்சிருக்காங்க இதனாலதான் நான் எப்பவும் டிவி மட்டும் பாக்குறேன்னு சொல்லுச்சு.

இரண்டாவது பன்னி சொல்லுச்சு என்னோட அண்ணனும் தம்பியும் கெட்ட பழக்கங்களா வச்சிருக்காங்க இதனாலதான் நான் எப்பவும் வீடியோ கேம் மட்டும் விளாடுறேன்னு சொல்லுச்சு.

மூணாவது பன்னி சொல்லுச்சு என்னோட அண்ணங்கள் ரெண்டுபேரும் கெட்ட பழக்கங்களா வச்சிருக்காங்க இதனாலதான் நான் எப்பவும் செல்போன் நோண்டரென்னு சொல்லுச்சு.

உடனே அந்த அப்பா பன்னி சொல்லுச்சு நீங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு பேப்பர் எடுத்துக்கோங்க மத்த பன்னிங்க எவ்வளவு நேரம் கேட்ட வேலைகளை செய்றங்கன்னு எழுதுங்க, அதிகமா நேரத்தை வீணடிக்கிற பன்னிய வீட்ட விட்டு தொரத்தி விட்ரலாம்னு சொல்லுச்சு.

இத கேட்ட மூணு பன்னிகளும் எப்ப பாத்தாலும் பேப்பரும் கையுமாவே இருந்துச்சுங்க

எதாவது தப்பு பண்ணினா நம்மள தொரத்திவிட்ட்ருவாங்கன்னு பயம் வந்ததால மூணு பன்னிகளும் சும்மாவே இருந்துச்சுங்க

சும்மா இருக்க இருக்க நாளோட நீளம் அந்த பன்னிகளுக்கு புரிஞ்சது.அதுல இருந்து எப்பவும் நேரத்தை வீணடிக்காம, அடுத்தவங்க மேல கோள்சொல்லாமலும் நல்ல பிள்ளைகளாகவும் மாறிடுச்சுங்க அந்த பன்னி மூணும்

பழமொழி :- ஒருவரையும் பொல்லாங்கு சொல்லவேண்டாம்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்