ரோஸ் வாட்டர் பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள்
31 ஆடி 2024 புதன் 14:56 | பார்வைகள் : 773
ரோஜா பூவின் இதழ்களை தண்ணீரில் வேக வைத்து தயாரிக்கப்படும் ஒரு அற்புதமான நீரே ரோஸ் வாட்டர் ஆகும். ரோஸ் வாட்டரானது பல நூற்றாண்டுகளாக கூந்தல் மற்றும் சருமத்திற்கான அழகு சாதன விஷயமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
ரோஸ் வாட்டரைப் பயன்படுத்துவதால் ஹைட்ரேஷன், எரிச்சல் மற்றும் சிவப்பை குறைப்பது, கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மற்றும் வீக்கம் குறைவது, சருமத்தில் இருக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துவது, சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைத்து தோற்றத்தை மேம்படுத்துவது உள்ளிட்ட பல சரும நன்மைகள் கிடைக்கின்றன.
அதே நேரம் ரோஸ் வாட்டர் சேதமடைந்த முடியை சரி செய்கிறது, முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது, பொடுகு பிரச்சனைக்கு தீர்வளிக்கிறது, ஸ்கால்ப்பை ஹைட்ரேட்டாக வைக்கிறது மற்றும் இயற்கையிலேயே கண்டிஷனிங் பண்புகளை கொண்டிருக்கிறது.
ஒரு பாத்திரத்தில் ஃபிரெஷ்ஷான ரோஜா இதழ்களை நிரப்பி,கொள்ளுங்கள். பின் அந்த பாத்திரத்தில் எடுத்து கொண்ட ரோஜா இதழ்கள் மூழ்குமளவிற்கு டிஸ்ட்டில்ட் வாட்டரை ஊற்றி கொள்ளுங்கள். பின்னர் அந்த பாத்திரத்தை அடுப்பில் வைத்து மூடி விட்டு, ஃபிளேமை குறைவாக வைத்து கொள்ளுங்கள். பின்னர் படிப்படியாக ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். பின்னர் சில நிமிடங்கள் களைத்து அடுப்பை அணைத்து அறை வெப்பநிலையில் குளிர வைக்கவும். இறுதியாக ரோஜா இதழ்களை போட்டு கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீரை சுத்தமாக வடிகட்டி, நன்கு சுத்திகரிக்கப்பட்ட ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்து கொள்ளுங்கள்.
ஆம், ரோஸ் வாட்டர் ஒரு இயற்கை கிருமி நாசினியாகும். இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஹைட்ரேஷன் மற்றும் அற்புதமான நன்மைகள் அடங்கி உள்ளன.
ஒருவேளை நீங்கள் கடைகளில் விற்கப்படும் ரோஸ் வாட்டரை வாங்கி பயன்படுத்த நினைத்தால் நறுமணம், சாயங்கள் மற்றும் ஆல்கஹால் சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை வாங்காமல் தவிர்க்கவும், ஏனெனில் இவை சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்த கூடும்.
டோனராக… அதிகப்படியான சீபம் உற்பத்தியை கட்டுப்படுத்தவும், எரிச்சல் இல்லாமல் சருமத்தில் இருக்கும் போர்ஸ்களை தூய்மைப்படுத்தவும் வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரோஸ் வாட்டரை பயன்படுத்துவது சிறந்தது.
ஷீட் மாஸ்க்: உங்கள் முகத்தை சுத்தப்படுத்த ஒரு காட்டன் பேடில் ரோஸ் வாட்டரை தடவி, பின் மென்மையான மற்றும் சிறந்த சருமத்திற்காக ரோஸ் வாட்டரில் நனைத்த ஷீட் மாஸ்க்கில் சீரம் வைக்கவும்.
கூந்தலுக்கு… சிறந்த கண்டிஷனிங் மற்றும் லேசான ரோஸ் வாசனைக்காக நீங்கள் உங்கள் கூந்தலை ஷாம்பு அல்லது கண்டிஷனிங் செய்த பிறகு சிறிதளவு ரோஸ் வாட்டரை உங்கள் தலைமுடியில் ஸ்ப்ரே செய்து கொள்ளலாம்.
ஃபேஸ் சீரம்: வழக்கம் போல உங்கள் முகத்தை கழுவிய பின் சிறிதளவு ரோஸ் வாட்டரை உங்கள் முகத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள். பின்னர் சரும பளபளப்புக்காக மாய்ஸ்சரைசர் அல்லது சீரம் அப்ளை செய்யவும்.
ஷவர் ஸ்ப்ரே… 6 - 7 சொட்டு ரோஸ் வாட்டரை நீங்கள் குளிக்கும் நீரில் சேர்த்து கொள்ளலாம் அல்லது சாஃப்டான மற்றும் ஃபிரெஷ்ஷான சருமத்திற்கு நேரடியாக உங்கள் சருமத்தில் ரோஸ் வாட்டரை சேர்த்து loofah-வுடன் எக்ஸ்ஃபோலியேட் செய்யலாம்.