Paristamil Navigation Paristamil advert login

93 ஆம் பிராந்திய மக்களுக்கு ஒரு புதிய மெத்ரோ சேவை..!

93 ஆம் பிராந்திய மக்களுக்கு ஒரு புதிய மெத்ரோ சேவை..!

1 புரட்டாசி 2023 வெள்ளி 12:37 | பார்வைகள் : 5183


Saint-Denis-Pleyel இல் இருந்து Le Mesnil Amelot வரை செல்லும் புதிய மெத்ரோ சேவை ஒன்று நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. Grand Paris Express திட்டத்தின் ஒரு பகுதியான 17 ஆம் இலக்க மெத்ரோ தான் இது.

Le Bourget விமான நிலையம், Parc des Expositions, La Courneuve Six Routes என முக்கியமான இடங்களினூடே பயணிக்கவுள்ள இந்த மெத்ரோ சேவை, வரும் 2026 தொடக்கம் 2030 ஆம் ஆண்டுக்குள் கட்டம் கட்டமாக திறக்கப்படவுள்ளது.

Saint-Denis-Pleyel இல் இருந்து Le Bourget வரை 2026 இலும், அங்கிருந்து Parc des Expositions வரை 2028 இலும் பின்னர் Le Mesnil Amelot வரை 2030 இலும் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

முன்னதாக அடுத்த ஆண்டு, 2024 இல், 17 ஆம் இலக்க மெற்றோவின் ஒரு பகுதியை ஆரம்பிப்பதென்று திட்டமிடப்பட்டிருந்தது. என்றாலும் கொவிட் காரணமாக நிர்மாணப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், 2026 ஆம் ஆண்டுக்கு பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்