Paristamil Navigation Paristamil advert login

ஒலிம்பிக் தளங்களில் Visa அட்டைகள் மட்டுமே செல்லுபடியாகும்.!

ஒலிம்பிக் தளங்களில் Visa அட்டைகள் மட்டுமே செல்லுபடியாகும்.!

24 ஆடி 2024 புதன் 16:46 | பார்வைகள் : 9002


ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் அனைத்து இடங்களிலும் பணப்பரிவர்த்தனை மேற்கொள்ளுவதற்கு Visa அட்டை மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஒலிம்பிக் நடைபெறும் இடங்களில் குளிர்பானங்கள், உணவுகள் போன்றவற்றை வாங்க, யூரோக்களில் பணம் செலுத்த முடியும். அட்டைகளில் பணம் செலுத்தவேண்டுமென்றால், தனியே Visa  அட்டையை மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள் எப்போது நடைபெற்றாலும் Visa நிறுவனமே அவர்களோடு இணைந்து செயற்படும். 1986 ஆம் ஆண்டில் இந்த கூட்டணி செயற்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்