ஜேசன் சஞ்சய் படத்தின் படப்பிடிப்பு எப்போது?
18 ஆடி 2024 வியாழன் 14:49 | பார்வைகள் : 1021
தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படத்தை இயக்க இருக்கிறார் என்றும் அந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த படத்தில் நாயகனாக நடிக்க கவின் உள்பட ஒரு சில நடிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்த நிலையில் ஹீரோ இன்னும் முடிவாகவில்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின்படி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணி முழுவதுமாக முடிந்து விட்டதாகவும் அடுத்த கட்ட பணிகளை தொடங்க ஜேசன் சஞ்சய் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா மற்றும் சுஷின் ஷ்யாம் ஆகிய இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இந்த இருவரில் ஒருவர் தான் இசையமைப்பாளராக பணிபுரிவார் என்றும் அனேகமாக யுவன் சங்கர் ராஜா பணிபுரிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இசையமைப்பாளர் சுஷின் ஷ்யாம் ஏற்கனவே பல மலையாள திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் என்ற நிலையில் ஜேசன் சஞ்சய் படம் மூலம் தமிழில் அறிமுகமாவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.