அஜித்துடன் மோதுகிறாரா சிவகார்த்திகேயன்?
18 ஆடி 2024 வியாழன் 09:28 | பார்வைகள் : 853
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது 21வது படமான அமரன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படமானது 2024 அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தன்று வெளியாக இருக்கிறது. அதேசமயம் நடிகர் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு தற்காலிகமாக SK23 என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதில் இசையமைப்பாளராக கமிட் ஆகியுள்ளார். மேலும் ருக்மினி வசந்த், வித்யூத் ஜம்வால், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிப்பதாக பட குழுவினர் சார்பில் அறிவிக்கப்பட்டது.
மேலும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் இந்த படத்தில் மெயின் வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அதைத்தொடர்ந்து படத்தின் படப்பிடிப்புகளும் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடியில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த படத்திற்கு சிங்க நடை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படம் ஸ்பை ஆக்சன் திரில்லர் படமாக உருவாகிறதாம். படத்தை 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியிடப்படக் குழுவினர் திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.