விக்ரம் தனுஷ் கூட்டணியில் புதிய படமா?
16 ஆடி 2024 செவ்வாய் 09:28 | பார்வைகள் : 918
நடிகர் விக்ரம் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். இவரது தனித்துவமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும்., அந்தளவிற்கு தன்னுடைய ஒவ்வொரு படங்களுக்காகவும் கடினமாக உழைத்து தன்னை மெழுகாய் உருக்கி வெவ்வேறு பரிமாணத்தில் தோன்றி வெற்றி காண்பார்.
அதேசமயம் நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக உருவெடுத்துள்ளார். இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் பாலிவுட், ஹாலிவுட் வரை சென்று எல்லை தாண்டி சாதனை படைத்து வருகிறார்.
இந்நிலையில் இந்த இரு பெரிய ஸ்டார் நடிகர்களின் கூட்டணியில் புதிய படம் உருவாகப் போவதாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.
அதாவது விக்ரம், தனுஷ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படத்தை இயக்குனர் அட்லீ இயக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகர் பகத் பாஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறாராம். மேலும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் சம்பளமே இல்லாமல் கேமியோ ரோலில் நடிக்கப் போகிறார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.இவ்வாறு மல்டி ஸ்டாரர் படமாக உருவாக இருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்றாலும் இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் இயக்குனர் அட்லீ சல்மான்கான் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்றும் செய்திகள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அடுத்ததாக இயக்குனர் அட்லீ என்ன படம் இயக்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.