Paristamil Navigation Paristamil advert login

சோமாலியா தலைநகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு - 5 பேர் பலி

சோமாலியா தலைநகரில் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு - 5 பேர் பலி

15 ஆடி 2024 திங்கள் 13:29 | பார்வைகள் : 2796


யூரோ 2024 கோப்பை இறுதிப் போட்டியை காண்பதற்காக சோமாலியா தலைநகர் மொகடிஷுவில் உள்ள ஒரு ஓட்டலில் ரசிகர்கள் குவிந்திருந்தனர்.

ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதி போட்டியை இளைஞர்கள் பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென சக்திவாய்ந்த கார் வெடிகுண்டு வெடித்ததில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்த குண்டு வெடிப்பில் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

வில்லா சோமாலியா என அழைக்கப்படும் ஜனாதிபதி மாளிகை வளாகத்திற்கு அருகில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்