Paristamil Navigation Paristamil advert login

■ எரிபொருட்களின் விலை வீழ்ச்சி..!

■ எரிபொருட்களின் விலை வீழ்ச்சி..!

11 ஆனி 2024 செவ்வாய் 06:29 | பார்வைகள் : 1635


பிரான்சில் எரிபொருட்களுக்கான விலை, கடந்த வருட ஜூலை மாதத்தோடு ஒப்பிடுகையில், இவ்வருடம் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தற்போது ஒரு லிட்டர் டீசல் 1.6738 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. மூன்றாவது வாரமாக 1.7 யூரோக்களுக்கும் குறைவான விலையில் டீசல் விற்பனையாகி வருகிறது. 

95-E10 பெற்றோல் ஒரு லிட்டர் தற்போது 1.8078 யூரோக்களுக்கு விற்பனையாகிறது. கடந்தவாரத்தோடு ஒப்பிடுகையில் 2.6 சதங்களினால் இந்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது. 

இவ்வருட ஏப்ரல் மாதத்தோடு ஒப்பிடுகையில், பெற்றோல், டீசல் போன்றவற்றின் விலை 12 சதம் வரை வீழ்ச்சியடைந்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்