Paristamil Navigation Paristamil advert login

பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி

பிரிந்திருக்கும் சக்திகள் ஒன்றிணைந்தால் தான் வெற்றி

11 ஆனி 2024 செவ்வாய் 04:19 | பார்வைகள் : 1662


புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், கே.சி.பழனிசாமி ஆகியோர் எங்கிருந்தாலும் வாழட்டும். சுயேச்சை சின்னத்தில் போட்டியிட்ட எனக்கு, ராமநாதபுரம் மக்கள் 3 லட்சத்துக்கு மேற்பட்ட ஓட்டுகளை வழங்கியுள்ளனர். அவர்களுக்கு என் நன்றி.

தேர்தலில் வெற்றி, தோல்வி என்பது தமிழகத்தில் சகஜமாக நடந்து வருகிறது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர், அ.தி.மு.க.,வை தொண்டர்கள் இயக்கமாக உருவாக்கினர். பின் மக்கள் இயக்கமாக மாற்றி, 16 ஆண்டுகள் ஆட்சி செய்யும் உரிமையை தமிழக மக்களிடம் இருந்து பெற்றோம். பா.ஜ., கூட்டணி, தமிழகத்தில் நிறைய ஓட்டுகள் பெற்றுள்ளது. அது, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி.

ஏழு தொகுதிகளில் அ.தி.மு.க., 'டிபாசிட்' இழந்தது குறித்து, அக்கட்சியின் தற்காலிக தலைவரிடம் தான் கேட்க வேண்டும். அ.தி.மு.க.,வில் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை எனில், எந்த காலத்திலும் வெற்றி பெற முடியாது' என்றார்.