Paristamil Navigation Paristamil advert login

இன்று ஏற்பாடு செய்திருந்த விமான கண்காட்சி இரத்து..!

இன்று ஏற்பாடு செய்திருந்த விமான கண்காட்சி இரத்து..!

20 ஆனி 2024 வியாழன் 10:22 | பார்வைகள் : 2105


இன்று ஜூன் 20 ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற இருந்த Roissy Meaux Airshow விமானக்கண்காட்சி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Seine-et-Marne மாவட்டத்தில் இந்த விமான கண்காட்சி இடம்பெற திட்டமிடப்பட்டு, நுழைவுச் சீட்டுக்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டிருந்தன. ஆனால் தற்போது நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்காட்சி இரத்துச் செய்யப்படுவதாக, அதனை ஏற்பாடு செய்திருந்த  Meaux-Esbly aerodrome நிறுவனம் அறிவித்துள்ளது.

நுழைவுச் சீட்டுக்கள் வாங்கியிருந்த அனைவருக்கும் கட்டணங்கள் திருப்பி வழங்கப்படும் எனவும், மீண்டும் நிகழ்வு அடுத்த வருடமே இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்