Paristamil Navigation Paristamil advert login

உருளைகிழங்கை ஏன் தினமும் சாப்பிட வேண்டும் தெரியுமா..?

உருளைகிழங்கை ஏன் தினமும்  சாப்பிட வேண்டும் தெரியுமா..?

18 ஆனி 2024 செவ்வாய் 11:44 | பார்வைகள் : 745


உருளைகிழங்கை தோலோடு சாப்பிட்டால் தான் அதிலுள்ள நார்ச்சத்துகளும் ஊட்டச்சத்துகளும் முழுமையாக கிடைக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதேப்போல் உருளைகிழங்கை வறுப்பதை விட வேக வைத்தோ, அவித்தோ சாப்பிடுவது நல்லது. மேலும் உருளைகிழங்கோடு மற்ற காய்கறிகள், லீன் புரொட்டீன் மற்றும் ஆரோக்கிய கொழுப்புகளை சேர்த்து சாப்பிடுவது சரிவிகித டயட்டின் ஒரு பகுதியாகும்.

ஒரு உருளைகிழங்கில் 7.9 கிராம் புரதம், 0.3 கிராம் லிபிட் கொழுப்பு, 66 கிராம் கார்போஹைடரேட், 291 கலோரி மற்றும் 2.29 கிராம் சர்க்கரை உள்ளது. தவிர உருளைகிழங்கில் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் முக்கியமான வைட்டமின் சி, வைட்டமின் பி6, பொட்டாசியம், மாங்கனீசியம் போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

நார்ச்சத்து : உருளைகிழங்கின் தோல்களில் அதிகளவு நார்ச்சத்து உள்ளது. இது செரிமானத்தை தூண்டி மலம் கழிப்பதை எளிதாக்குகிறது. அதுமட்டுமின்றி வயிறு நிறைந்த திருப்தியை தந்து உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது.

உடலின் ஆற்றலை அதிகரிக்கும் : உருளைகிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகமுள்ளதால் நாள் முழுவதற்கும் தேவையான சக்தியை இது தருகிறது.

இதயத்திற்கு நல்லது : உருளைகிழங்கில் அதிகளவு பொட்டாசியம் உள்ளதால் உடலில் உள்ள சோடியம் அளவை சமநிலைப்படுத்தி ரத்த அழுத்தத்தை ஒழுங்குபடுத்த உதவும். இதன் மூலம் இதய நோய் மற்றும் பக்கவாதம் வரும் ஆபத்து குறைகிறது. 

ஆண்டி ஆக்ஸிடெண்ட் : உருளைகிழங்கில் ஃப்ளாவோனாய்டு, கரோடீனாய்டு, பீனாலிக் ஆசிட் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிகல்ஸை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் அழுத்தத்திலிருந்து உடலை பாதுகாப்பதோடு நாள்பட்ட நோய்கள் வரும் ஆபத்தையும் குறைக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது : உருளைகிழங்கில் உள்ள வைட்டமின் சி நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதிலுள்ள வைட்டமின் சி உடலில் கொலஜன் உற்பத்தியை அதிகரித்து காயங்களை குணமாக்குவதோடு உணவில் இருக்கும் இரும்புச்சத்தை உறிஞ்ச உதவுகிறது.

க்ளூட்டன் இல்லா உணவு : இயற்கையாகவே உருளைகிழங்கில் க்ளூட்டன் இல்லாத காரணத்தினால் சீலியாக் நோய் அல்லது க்ளூட்டன் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக இதை எடுத்துக்கொள்ளலாம். க்ளூட்டன் நிறைந்த தானியங்களுக்கு மாற்றாக இதை டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.

செரிமான ஆரோக்கியம் : உருளைகிழங்கில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை அதிகப்படுத்தி குடல் ஆரோகியத்திற்கு உதவி செய்கிறது. சமைத்த குளிர்ச்சியான உருளைகிழங்கில் உள்ள ஸ்டார்ச் ப்ரீபயாடிக்காக செயல்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்