Paristamil Navigation Paristamil advert login

முத்தையா இயக்கத்தில் இணையும் இரண்டு ஹீரோக்கள்..!

முத்தையா இயக்கத்தில் இணையும் இரண்டு ஹீரோக்கள்..!

16 ஆனி 2024 ஞாயிறு 16:00 | பார்வைகள் : 499


தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான முத்தையாவின் அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் மேலும் இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் படமாக உருவாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

சசிகுமார் நடித்த ’குட்டிப்புலி’ என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான முத்தையா, அதன்பின் ’கொம்பன்’ ’மருது’ ’கொடிவீரன்’ ’தேவராட்டம்’ ’புலிக்குட்டி பாண்டியன்’ ’விருமன்’ மற்றும் ’காதர் பாஷா என்ற முத்துராமலிங்கம்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் முத்தையாவின் அடுத்த படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வரும் நிலையில் தற்போது அவரது அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்கள் நடிக்க இருப்பதாகவும் இருவரும் அவரது இயக்கத்தில் ஏற்கனவே நடித்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

அதாவது ’புலிக்குட்டி பாண்டி’ படத்தில் நடித்த விக்ரம் பிரபு மற்றும் ’தேவராட்டம்’ படத்தில் நடித்த கௌதம் கார்த்திக் ஆகிய இருவரும் முத்தையா இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும் இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி இந்த படத்தில் மேலும் சில பிரபலங்கள் இணைவார்கள் என்றும் எனவே இந்த படம் ஒரு மல்டி ஸ்டார் பாடமாக உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கௌதம் கார்த்திக் ஏற்கனவே கமல்ஹாசனின் ’தக்லைஃப்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்து வரும் நிலையில் முத்தையாவின் அடுத்த படத்திலும் விரைவில் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்