இலங்கையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் தொடர்பில் வெளியான தகவல்
16 ஆனி 2024 ஞாயிறு 14:48 | பார்வைகள் : 2302
உயர்த்தப்பட்ட விலைகளுடன் ஒப்பிடுகையில் கையடக்கத் தொலைபேசிகளின் விலைகள் குறைக்கப்படவில்லை என அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும் கருத்து தெரிவித்த அகில இலங்கை தொடர்பாடல் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திரஜித் பெரேரா,
“கையடக்க தொலைபேசிகளின் விலை உயர்வை எடுத்துக் கொண்டால், 300% முதல் 400% வரை அதிகரித்தன. சிறிய கையடக்க தொலைபேசிகளில் இருந்து நல்ல ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் வரை விலை உயர்ந்தன.
ஆனால் தற்போது அது குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், குறிப்பிட்ட அளவே குறைந்துள்ளது.
ஆனால் பிரச்சனை என்னவென்றால்... குறைக்கப்பட்ட தொகை சுமார் 30% முதல் 35% வரையே. 300% முதல் 400% அதிகரித்து விட்டு 35% முதல் 30% வரை குறைத்தால் இது நியாயமா? வாடிக்கையாளர்கள் இந்த விலை குறைப்பை எவ்வாறு உணர்வார்கள்?
இது குறித்து மகிழ முடியுமா? என்பது சந்தேகமே" என்றார்.