Paristamil Navigation Paristamil advert login

சட்டமன்றத்தைக் கலைத்தது வரவேற்கத்தக்கது - பொதுமக்கள் கருத்து..!

சட்டமன்றத்தைக் கலைத்தது வரவேற்கத்தக்கது - பொதுமக்கள் கருத்து..!

16 ஆனி 2024 ஞாயிறு 13:43 | பார்வைகள் : 4612


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் சென்ற ஞாயிற்றுக்கிழமை சட்டமன்றம் கலைக்கப்படுவதாகவும், பொதுதேர்தல் இடம்பெறும் எனவும் அறிவித்திருந்தார். அரசியல் களத்தில் இந்த எதிர்பாராத திருப்பம் பெரும் பரபரப்பை ஏற்படுதி, தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடு பிடித்துள்ளன. 

இந்நிலையில், சட்டமன்றம் கலைக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என கிட்டத்தட்ட பத்தில் ஆறு பேர் (58% சதவீதமான பிரெஞ்சு மக்கள்)  தெரிவித்துள்ளனர். 'ஜனாதிபதி எடுத்த முடிவு வரவேற்கத்தக்கது' என தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, 'இல்லை. அது தவறு' என 41% சதவீதமான மக்கள் தெரிவித்துள்ளனர். 

 

இந்த கருத்துக்கணிப்பை Elabe நிறுவனம் மேற்கொண்டிருந்தது.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்