கரடி சொன்ன ரகசியம்

3 வைகாசி 2024 வெள்ளி 09:51 | பார்வைகள் : 3221
ஒரு காட்டுப்பகுதியில் இரண்டு நண்பர்கள் நடந்து போயிகிட்டு இருந்தாங்க
அப்ப ஒரு கரடி அவுங்கள நோக்கி வர்றத பாத்தாங்க
உடனே ஒரு நண்பன் வேகமா ஓடி போயி பக்கத்துல இருந்த மரத்து மேல ஏறி உக்காந்துக்கிட்டான்
தன்னோட வந்த நண்பன் என்ன ஆனான்னு கூட பாக்காம தன்னோட சுயநலத்துக்காக மரத்துல ஏறுனான் அவன்
இதப்பாத்த அந்த இன்னொரு நண்பன் அடடா அவனை மாதிரி நம்மளால மரத்துல ஏற முடியாதே
என்ன பண்றதுன்னு யோசிச்சான்
உடனே அவனுக்கு ஒரு யோசனை தோணுச்சு
உடனே மூச்சை புடிச்சுகிட்டு செத்த மாதிரி படுத்தான்
கரடி செத்தத திங்காதுனு அவுங்க அம்மா சொன்னது ஞாபகத்துல இருக்குறதால அந்த மாதிரி செஞ்சான்
பக்கதுல வந்த அந்த கரடி செத்த மாதிரி இருந்த நண்பன் கிட்ட வந்தது
கரடி வந்து மோந்து பாக்குறத உணர்ந்த அந்த நண்பன் மூச்ச பிடிச்சுகிட்டு இருந்தான்
மோந்து பாத்த அந்த கரடி செத்ததை திங்காதுங்குறதால அவனை விட்டுட்டு போயிடுச்சு
இத மேல இருந்து பாத்த அந்த நண்பன் கீழ இறங்கி வந்தான்
கரடி உன் காதுல என்ன சொல்லுச்சுன்னு கேட்டான்
அதுக்கு அந்த நண்பன் கரடி எனக்கு ஒரு ரகசியம் சொல்லுச்சு
அது என்ன ரகசியம்னு அந்த நண்பன் கேட்டான்
ஆபத்துல உதவாத நண்பனை நம்பாதன்னு சொல்லுச்சுனு சொன்னான்
இதைக்கேட்டு வெட்க்கி தல குனிஞ்சான் அந்த நண்பன்