Paristamil Navigation Paristamil advert login

திரைப்படமாகும் நடிகர் ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு?

 திரைப்படமாகும் நடிகர் ரஜினிகாந்தின்  வாழ்க்கை வரலாறு?

1 வைகாசி 2024 புதன் 04:50 | பார்வைகள் : 404


சினிமா  சாம்ராஜ்யத்தில் அசைக்க முடியாத அஸ்திவாரமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த். ஸ்டைல் என்ற வார்த்தையை கேட்டாலே நினைவுக்கு வரும் ஒரு பெயர் ரஜினிகாந்த். அந்த அளவிற்கு கோலிவுட் திரையுலகில் ஸ்டைலுக்கும், மாஸூக்கும் பெயர் போனவர் ரஜினிகாந்த். கடந்த 45 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் ரஜினிகாந்த் அன்று முதல் இன்று வரை சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்திற்கு வலு சேர்த்து வருகிறார். மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்த ரஜினிகாந்துக்கு தமிழில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் பல மொழி பேசும் பல கோடி ரசிகர்கள் உள்ளனர்

தற்போது ரஜினிகாந்த் அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வருகிறார். ஜெயிலர் படத்தில் நடித்த முடித்த ரஜினிகாந்த், அடுத்ததாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வேட்டையன் படப்பிடிப்பு முடிவுக்கு வந்தவுடன் அவர் கூலி படப்பிடிப்பில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாற்று படத்தை எடுக்க பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தன. பிரபல தயாரிப்பாளர் சஜித் நாடியாவாலா தான் இன்த பயோபிக் திரைப்படத்தை தயாரிக்கிறார். தற்போது இப்படத்திற்கான திரைக்கதை எழுதும் பணிகள்தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்