Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் Nebraska மாகாணத்தை தாக்கியசுழல்காற்று

அமெரிக்காவின் Nebraska மாகாணத்தை தாக்கியசுழல்காற்று

29 சித்திரை 2024 திங்கள் 10:10 | பார்வைகள் : 581


அமெரிக்காவின் நெப்ராஸ்கா (Nebraska) மாகாணத்தை தாக்கிய சுழல்காற்றின் காணொளி ஒன்று வைரலானது.

கடந்த ஒரு வாரமாக அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் வீசிய சக்தி வாய்ந்த சூறாவளி பல வீடுகளை அழித்துள்ளது.

இதில், சக்திவாய்ந்த சுழல்காற்று வடக்கு நெப்ராஸ்காவில் நெடுஞ்சாலையை கடப்பதைக் காணமுடிகிறது.

வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தினர். 

சுழற்காற்று சாலையை கடந்ததும், வாகன ஓட்டிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சூறாவளியில் ட்ரைலர் லொறி ஒன்று நெடுஞ்சாலையின் நடுவில் கவிழ்ந்த காட்சிகளும் காணொளியில் பதிவாகியுள்ளது.

அதிர்ஷ்டவசமாக, லொறியை ஓட்டிவந்த சாரதிக்கு காயம் ஏற்படவில்லை. 

இதுபோல், அமெரிக்கா முழுவதும் 70க்கும் மேற்பட்ட சுழல்காற்று பதிவாகியுள்ளன.

அவற்றில் பெரும்பாலானவை நெப்ராஸ்காவின் ஒமாஹாவின் போக்குவரத்து மையத்தைச் சுற்றி அமைந்துள்ளன.

நெப்ராஸ்காவை சூறாவளி தாக்கியதால் சுமார் 11,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்