Paristamil Navigation Paristamil advert login

அதிரடி முடிவுஎடுத்த 'குட் பேட் அக்லி' படக்குழு ...

அதிரடி முடிவுஎடுத்த 'குட் பேட் அக்லி' படக்குழு   ...

29 சித்திரை 2024 திங்கள் 05:58 | பார்வைகள் : 329


அஜித் நடிக்கவிருக்கும் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என்றும் அதற்கு முன்பே ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்றும் செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது வெளிவந்திருக்கும் தகவல்படி மே மாதம் ’குட் பேட் அக்லி’ படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் ’விடாமுயற்சி’ படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிகிறது.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் அனிருத் இசையில் உருவாகும் ’குட் பேட் அக்லி’ என்ற படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் ஜூன் மாதம் இந்த படத்தை தொடங்கி அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ஜூன் மாதத்திற்கு முன்பே மே 2 அல்லது 3வது வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க ஆதிக் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளதாகவும் அஜித் 1ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய பின்னர் இந்த படப்பிடிப்புக்கு தயார் ஆவார் என்று கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் ’விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் ’குட் பேட் அக்லி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் ’விடாமுயற்சி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தி படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

’விடாமுயற்சி’ திரைப்படத்தில் த்ரிஷா நாயகியாக நடித்து வரும் நிலையில் குட் பேட் அக்லி’ படத்தில் நாயகியாக ஸ்ரீலீலா நடிக்க இருப்பதாகவும் மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்