சிம்பு நடிக்க இருக்கும் 48வது படத்தில் 2 பாலிவுட் நடிகைகளா?
22 வைகாசி 2024 புதன் 11:55 | பார்வைகள் : 2525
சிம்பு நடிக்க இருக்கும் 48வது படம் குறித்த தகவல்கள் கடந்த ஒரு ஆண்டாக வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தில் இரண்டு முன்னணி பாலிவுட் நடிகைகள் நடிக்க இருப்பதாக கூறப்படுவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிம்பு நடிப்பில், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் ’STR48’. இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேல் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் அடுத்த மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தெரிகிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டு பாலிவுட் முன்னணி நடிகைகளான கைரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. கைரா அத்வானி ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடித்து வரும் ’கேம் சேஞ்சர்’ என்ற தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் ஜான்வி கபூர் முதல் முறையாக தமிழ் படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைரா அத்வானி மற்றும் ஜான்வி கபூர் ஆகிய இருவரும் பாலிவுட்டில் முன்னணி நடிகைகள் என்ற நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக அவர்களுக்கு பெரும் தொகை சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கும் என்பதால் இந்த படத்தின் பட்ஜெட் எகிறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே இந்த படத்திற்காக 100 கோடி ரூபாய் பட்ஜெட் போடப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்த இரண்டு பாலிவுட் பிரபலங்களால் இன்னும் பட்ஜெட் அதிகமாகும் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தின் பிசினஸ் ஆச்சரியப்படத்தக்க வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.