Paristamil Navigation Paristamil advert login

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு மேலும் நிதி ஒதுக்கும் அரசு..!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துக்கு மேலும் நிதி ஒதுக்கும் அரசு..!!

22 வைகாசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 2691


செயற்கை நுண்ணறிவு (Intelligence artificielle) தொழில்நுட்பத்துக்காக €400 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்படுவதாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அறிவித்துள்ளார். 

நேற்று மே 21 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிசில் VivaTech தொழில்நுட்ப கண்காட்சி ஆரம்பமானது. அதனை வரவேற்று வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், அதன் போதே இதனைக் குறிப்பிட்டார். செயற்கை நுண்ணறிவு தரவேற்று மையங்கள் (des clusters de l'IA) அமைக்கப்பட்டு அதில் ஆண்டுக்கு 40,000 தொடக்கம் 100,000 வரையானவர்கள் பயிற்சிவிக்கப்பட உள்ளதாகவும், அதற்கு இந்த நிதி அவசியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அதேவேளை, பிரான்சில் மிகப்பெரிய பொருட்செலவில் உலகின் மிகப்பெரிய செயற்கை நுண்ணறிவு மதிப்பீட்டு மையம் ஒன்றும் அமைக்கப்பட உள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்