Paristamil Navigation Paristamil advert login

முட்டை க்ரேவி

முட்டை க்ரேவி

20 வைகாசி 2024 திங்கள் 14:53 | பார்வைகள் : 596


கோடை விடுமுறையில் இருக்கும் உங்கள் குழந்தைகள் சாப்பிட அடம்பிடிக்கிறார்களா.? சுவையான அதே வேளையில் சத்தான செட்டிநாடு முட்டை க்ரேவி இப்படி செஞ்சு கொடுங்க. எப்படி குழந்தைங்க சாப்பிடறாங்கனு மட்டும் பாருங்க. வாங்க இப்போ எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

முட்டை - 3
பெரிய வெங்காயம் - 1
உப்பு - சுவைக்கேற்ப
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 2
பூண்டு - 3 பல்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 3 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1/2 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
இலவங்கப்பட்டை - 1
பெருஞ்சீரகம் - 1டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

முதலில் முட்டையை வேக வைத்து அதை தோல் நீக்கி வைத்துக்கொள்ளுங்கள். பின்னர் ஒரு மிக்ஸியில் துருவிய தேங்காய், தக்காளி, கருப்பு மிளகு, பூண்டு, பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை சேர்த்து மென்மையாக அரைத்து எடுத்து வையுங்கள். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை வறுத்துக்கொள்ளுங்கள்.

பின்னர் அதில் அரைத்த மசாலாவை சேர்த்துக்கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க விடவும் சிறிது நேரத்திற்கு பிறகு வேகவைத்த முட்டையை முழுதாகவோ பாதியாகவோ உங்கள் விருப்பம் போல சேர்த்து இப்போது சுவை பார்த்துவிட்டு இறக்கினால் செட்டிநாட்டு முட்டை கிரேவி தயார். நீங்கள் இதை டிபன், சாதம் எதனுடன் வேண்டுமானாலும் சேர்த்து உண்ணலாம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்