Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் பிரபலமான தேங்காய் ரொட்டி !

இலங்கையில் பிரபலமான தேங்காய் ரொட்டி !

16 வைகாசி 2024 வியாழன் 07:08 | பார்வைகள் : 686


புதுமையான உணவுகள் செய்து கொடுத்தால் ஆர்வமாக குழந்தைகள் சாப்பிடுவார்கள். ஆனால் என்ன செய்வது என்பது தான் நமக்கு பலநேரங்களில் தெரியாது.அதற்கான ஒரு உணவைத் தான் இப்போது உங்களுக்காக எடுத்து வந்துள்ளோம். இலங்கையில் பிரபலமான தேங்காய் ரொட்டி 

தேவையான பொருட்கள்

2 கப் மைதா

2-3 பச்சை மிளகாய், நறுக்கியது

1 கப் துருவிய தேங்காய்

1 வெங்காயம், நறுக்கியது

ஒரு கைப்பிடி கறிவேப்பிலை

உப்பு, சுவைக்க

தண்ணீர், தேவைக்கேற்ப

எண்ணெய், தேவைக்கேற்ப

இலங்கை தேங்காய் ரொட்டி செய்வது எப்படி

இந்த ரொட்டி செய்ய, ஒரு பாத்திரத்தில் தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து அதோடு ​​மைதா மற்றும்  சிறிது தண்ணீர் சேர்த்து, மிருதுவான மாவு பதத்திற்கு பிசையவும். 5-10 நிமிடங்கள் ஊற  வைக்கவும்.

சிறிது நேரம் கழித்து உங்கள் கைகளில் எண்ணெய் தடவி, மாவை சம பாகங்களாக பிரிக்கவும். மாவு உருண்டைகளில் ஒன்றை எடுத்து உங்கள் விரல்களால் மெதுவாக தட்டவும்.  குறைந்த மிதமான தீயில் சூடாக்கி அதன் மீது தட்டையான மாவை வைக்கவும்.

பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை ஒவ்வொரு பக்கத்திலும் சமைக்கவும். அதன் மேல் சிறிது நெய்யைத் தடவி வேகவிடவும். இலங்கை தேங்காய் ரொட்டி தயார்! சூடாக பரிமாறலாம். கரசமான கிரேவியுடன் சாப்பிட்டு பாருங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்