Paristamil Navigation Paristamil advert login

சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்- ராயன் படத்தின் முதல் பாடல் வெளியானது..

சர்ப்ரைஸ் கொடுத்த தனுஷ்- ராயன் படத்தின் முதல் பாடல் வெளியானது..

9 வைகாசி 2024 வியாழன் 15:09 | பார்வைகள் : 344


தனுஷின் ஐம்பதாவது படமான ‘ராயன்’ என்ற படத்தை அவரே இயக்கி உள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் வரும் ஜூன் மாதம் இந்த படம் வெளியாகும் என்று சமீபத்தில் அறிவிப்பு வெளியானது என்பது தெரிந்தது.

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற சிங்கிள் பாடல் சற்றுமுன் வெளியாகி உள்ள நிலையில் இசை புயல் ஏஆர் ரகுமான் கம்போஸ் செய்த இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

தனுஷ் பாடல் வரிகளில் தனுஷ் மற்றும் ஏஆர் ரகுமான் பாடிய இந்த பாடல் முதல் முறை கேட்கும் போதே அனைவரையும் கவரும் வகையில் இருப்பதாக கமெண்ட்கள் பதிவாகி வருகிறது. மேலும் ஆக்ரோஷமான வரிகளை தனுஷ் எழுதி இருப்பதாகவும் இந்த படத்தின் கதையை அவர் மறைமுகமாக இந்த பாடலில் தெரிவித்து இருப்பதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் ‘ராயன்’ திரைப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலில் இடம்பெற்ற முதல் நான்கு வரிகள் இதோ.

அடங்காத அசுரன் தான் வணங்காத மனுஷன் தான்
தோளோடு தோள் நின்னா தருவானே உசுர தான்

போருக்கு போகனும் போகனும் பொருள எடுத்து வாய்யா
யாருங்க ஒதுங்கு ஒதுங்கு ராயனும் வருவான் தீயா

தனுஷ், எஸ்ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷான், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில், பிரசன்னா ஜிகே படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்