Paristamil Navigation Paristamil advert login

நண்டு மசாலா குழம்பு

நண்டு மசாலா குழம்பு

4 சித்திரை 2024 வியாழன் 09:38 | பார்வைகள் : 1696


நாவில் எச்சில் ஊறவைக்கும் சுவையான நண்டு மசாலா குழம்பு வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் தெரிந்துகொள்ளுங்கள்.

செய்முறை :

நண்டு மாரினேட் செய்ய தேவையானவை :

நண்டு - 18 - 10

மஞ்சள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

குழம்பு வைக்க தேவையானவை :

பெரிய வெங்காயம் - 2

தக்காளி - 3

பச்சை மிளகாய் - 1

துருவிய தேங்காய் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்

கருப்பு மிளகு - 2 டீஸ்பூன்

பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 3 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு


செய்முறை :

முதலில் நண்டுகளை நன்றாக சுத்தம் செய்து அலசி அதன் நெறிகளை முழுதாகவோ அல்லது இரண்டு துண்டுகளாகவோ உடைத்து, மேலும் அதிலுள்ள அதன் கால்களையும் தனியாக உடைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் சிறிதளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து 15 - 20 நிமிடங்கள் மூடி போட்டு ஊற வைக்கவும்.

அடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைக்கவும்.

பின்னர் அதனுடன் துருவிய தேங்காய், கருப்பு மிளகு மற்றும் பெருஞ்சீரகம் போட்டு நன்றாக பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.

தற்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும்.

பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்றாக கலந்துவிட்டுக்கொள்ளுங்கள்.

இதன் மேல் எண்ணெய் பிரிந்து வந்ததும் சுவைக்கேற்ப உப்பு கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து சமைக்கவும்.

ஒரு கொதி வந்தவுடன் மாரினேட் செய்த நண்டு துண்டுகளை சேர்த்து நன்கு கலந்துகொள்ளுங்கள்.

பின்னர் நண்டு மசாலா குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி 20 நிமிடங்களுக்கு மிதமான தீயில் சமைக்கவும்.

இறுதியாக கொத்தமல்லி இலைகளை நறுக்கி போட்டு இறக்கினால் சுவையான நண்டு மசாலா குழம்பு ரெடி.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்