Paristamil Navigation Paristamil advert login

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு  அறுவை சிகிச்சை

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு  அறுவை சிகிச்சை

2 சித்திரை 2024 செவ்வாய் 10:25 | பார்வைகள் : 4182


இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு (Benjamin Netanyahu)   அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதாவது அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சையைத் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதனைதொடர்ந்து இன்று பிற்பகல் அவர் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். 

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பிரதமரின் உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்து தனது அன்றாட பணியை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜெருசலேமில் உள்ள ஹடாசா மருத்துவ மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,"

இன்று பிரதமர் நெதன்யாகுவிற்கு வெற்றிகரமாக குடலிறக்க அறுவை சிகிச்சைக்கு மேற்கொள்ளப்பட்டாகவும், பின்னர், நெதன்யாகு சுயநினைவுடன் இருப்பதாகவும், குடும்பத்துடன் உரையாடி வருவதாகவும், அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிட்டுள்ளது.