Paristamil Navigation Paristamil advert login

பொதுவான சீரமைப்புக்களைச் செய்வதில் ஐரோப்பா பின் தங்கி உள்ளது! - ஜனாதிபதி மக்ரோன்!

பொதுவான சீரமைப்புக்களைச் செய்வதில் ஐரோப்பா பின் தங்கி உள்ளது! - ஜனாதிபதி மக்ரோன்!

26 சித்திரை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 1366


உலக நாடுகளோடு ஒபிடுகையில், பொதுவான மறுசீரமைப்புக்களைச் செய்வதில் ஐரோப்பா மிகவும் பின் தங்கியுள்ளது என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

நேற்று ஏப்ரல் 25 ஆம் திகதி வியாழக்கிழமை பரிசில் உள்ள  Sorbonne கல்லூரி வளாக அரங்கில் ஜனாதிபதி உரையாற்றினார். கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் இந்த உரை நீடித்தது. அதில் பொதுவாக தொழிழ்நுட்பங்கள் குறித்தும் அதன் வளர்ச்சி குறித்தும் பல விடயங்களை வெளியிட்டார்.

குறிப்பாக, பிரான்ஸ் மற்றும் ஒட்டுமொத்த ஐரோப்பாவும் தொழில்நுட்ப விடங்களை ஏற்றுக்கொள்வதில் மிகவும் பின் தங்கி உள்ளதாகவும், 'மெதுவாக' இயங்குவதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, பொதுவான விடங்களை ஐரோப்பா சீரமைப்பு செய்வதிலும் தாமதத்தையே கொண்டுள்ளது எனவும் தெரிவித்தார். 

ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஆறு வாரங்களே உள்ள நிலையில், ஜனாதிபதியின் இந்த கருத்து சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்