Paristamil Navigation Paristamil advert login

‘வெங்காய போண்டா’

‘வெங்காய போண்டா’

25 சித்திரை 2024 வியாழன் 06:40 | பார்வைகள் : 231


மாலையில் வேலையில் இருந்து வீட்டிற்கு வரும் வழியில் லேசாக பசித்தால் டீ கடைகளில் கிடைக்கும் வெங்காய போண்டா, பஜ்ஜி, வடை என டீ, காபியுடன் வாங்கி சாப்பிடுவது சிலருக்கு வழக்கம். அதிலும் டீ கடைகளில் கிடைக்கும் மொறுமொறு வெங்காய போண்டாவை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். முக்கியமாக குழந்தைகள். ஏனென்றால் குழந்தைகளுக்கு மொறுமொறு ஸ்னாக்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும்.

தேவையான பொருட்கள் :

பெரிய வெங்காயம் - 4

பச்சை மிளகாய் - 2

அரிசி மாவு - 1/4 கப்

கடலை மாவு - 1/2 கப்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி இலை - சிறிதளவு

உப்பு - சுவைக்கேற்ப

செய்முறை :

முதலில் பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.

பிறகு அதில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை மற்றும் கொத்தமல்லி இலையை சேர்த்து அதனுடன் மிளகாய்த்தூள் போட்டு தண்ணீர் விடாமல் நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

பின்னர் அதனுடன் அரிசி மாவு, கடலை மாவு மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து எல்லாவற்றையும் ஒன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.

அடுத்து அடுப்பில் கடாய் ஒன்றை வைத்து போண்டா பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.

எண்ணெய் நன்கு சூடானதும் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு சிறு உருண்டைகளாக அழுத்தம் கொடுக்காமல் உருட்டி ஒவ்வொன்றாக எண்ணெய்யில் போட்டுக்கொள்ளுங்கள்.

அடுப்பை மிதமான தீயில் வைத்து போண்டா எல்லா பக்கமும் வெந்து சிவக்கும் வரை நன்கு வறுத்துக்கொள்ளுங்கள்.

வெங்காய போண்டா முழுமையாக வெந்து மொறுமொறுவென ஆனவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து சுட சுட சாப்பிட்டால் அதன் சுவை அருமையாக இருக்கும்.

மேலும் மாலை நேரத்தில் காபி, டீயுடன் சேர்த்து பரிமாறினால் அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும்.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்