இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகும் ஹிஸ்புல்லா அமைப்பு - மத்திய கிழக்கில் பதற்றம்
23 சித்திரை 2024 செவ்வாய் 10:34 | பார்வைகள் : 1942
லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் இராணுவத்தளங்களை இலக்கு வைத்து வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக மத்திய கிழக்கில் பதற்றநிலை தீவிரமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் - ஈரான் இடையேயான மோதல் தணிந்துள்ள நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
லெபனானில் உள்ள ஆயுதக்குழுவான ஹிஸ்புல்லா அமைப்பிற்கு ஈரான் நிதி உதவி அளித்து வருகிறது.
லெபனானில் தெற்கு பகுதியில் உள்ள கிரமங்களை குறிவைத்து இஸ்ரேல் அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும் இதற்கு பதிலடியாகத்தான் 12 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ஏவி ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த தாக்குதலை இஸ்ரேல் உறுதி செய்துள்ளது. இது தொடர்பில் இஸ்ரேல் தரப்பு கூறுகையில்,
''லெபனானில் இருந்து எயின் ஸெடிம் பகுதியை நோக்கி 35 க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் எந்த சேதமும் ஏற்படவில்லை. இந்நிலையில் தாக்குதலுக்கு எதிரான பதிலடியாக இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகிறது." என கூறப்பட்டுள்ளது.