வார இறுதியில் பிரித்தானியாவுக்குச் சென்றடைந்த 748 அகதிகள்!
15 சித்திரை 2024 திங்கள் 17:42 | பார்வைகள் : 4560
வார இறுதியில் (ஏப்ரல் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில்) 748 அகதிகள் பிரான்சில் இருந்து பிரித்தானியாவைச் சென்றடைந்துள்ளனர்.
சிறிய மீன்பிடி படகுகளில் பிரான்சில் Nord மற்றும் Pas-de-Calais கடற்கரைகளில் இருந்து புறப்பட்டு இங்கிலாந்து தீவினை சென்றடைந்துள்ளனர். இதில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15 படகுகளில் 534 அகதிகள் வந்தடைந்துள்ளனர். படகு ஒன்றுக்கு 50 பேர் வீதம் பயணித்திருந்ததாக பிரித்தானிய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
அதேவேளை, பிரான்ஸ் தரப்பில் கடலில் மூழ்க இருந்த 103 அகதிகளை கடற்படையினர் மீட்டிருந்த்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Bray Dunes, Wissant மற்றும் Grand Fort Philippe ஆகிய கடற்கரைவழியாக பயணித்திருந்த நிலையில் அவர்கள் மீட்கப்பட்டிருந்தனர்.
இவ்வருடம் ஜனவரி 1 ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 1 ஆம் திகதி வரையான நாட்களில் 5,373 அகதிகள் ஆங்கிலக்கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.