Paristamil Navigation Paristamil advert login

துருக்கியில்  மலை உச்சியில் அறுந்த கேபிள் கார்...  174 பேரின் நிலை!

துருக்கியில்  மலை உச்சியில் அறுந்த கேபிள் கார்...  174 பேரின் நிலை!

15 சித்திரை 2024 திங்கள் 10:35 | பார்வைகள் : 1811


துருக்கியில் கேபிள் கார் அறுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் பல மணித்தியால போராட்டத்திற்கு பின்னர் 174 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

துருக்கி - அன்டலியா நகரில் உள்ள மலையில் கேபிள் கார் வசதி உள்ளது.

இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து கேபிள் கார்களில் செல்வார்கள். 

2,010 அடி உயர மலை உச்சியில் உள்ள உணவகம் மற்றும் சுற்றுலா தலத்திற்கு கொன்யால்டி கடற்கரையிலிருந்து சுற்றுலாப் பயணிகள் கேபிள் கார்கள் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றார்கள்.

இந்த நிலையில் நேற்றையதினம் (14-04-2024) கேபிள் கார் ஒன்று அறுந்து விழுந்து பாறை மீது மோதியதில் ஒருவர் பலியானார். 

7 பேர் காயமடைந்தனர்.

இந்த விபத்தால் கேபிள் கார்களை இயக்க முடியவில்லை. இதனால் மலைக்கு மேல் கேபிள் கார்களில் 174 பேர் சிக்கித் தவித்தனர்.

அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதில் மீட்புக்குழுவினர் 600 பேர் மற்றும் 10 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டன.

இரவு முழுவதும் மீட்புப்பணி நடந்த நிலையில் சுமார் 23 மணியத்தியலங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்