பரிஸ் : வழமைக்குத் திரும்பிய வெப்பம்!
14 சித்திரை 2024 ஞாயிறு 16:32 | பார்வைகள் : 4035
இந்த வாரம் முழுவதும் ’கோடைகாலம்’ போன்று நிலவிய கடும் வெப்பம், நாளை முதல் வழமைக்கு திரும்புகிறது.
ஏப்ரல் மாத முதல் பாதி வரை நிலவும் வழமையான வெப்பத்தை விட, இவ்வருடத்தில் 6 தொடக்கம் 8℃ வரை அதிகமாக வெப்பம் பதிவாகியிருந்தது. இந்த வெப்பம் இன்று ஏப்ரல் 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவுக்கு வருகிறது.
நாளை பரிசில் 20°C வெப்பம் பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சில இடங்களில் 14 இல் இருந்து 20℃ வரை பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் பிரான்சில் சில மாவட்டங்களில் வழமைக்கு மாறாக 29℃ வரை வெப்பம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.