Paristamil Navigation Paristamil advert login

சிலரின் வாட்ஸ்அப் DPஐ ஏன் பார்க்க முடியவில்லை...? 

சிலரின் வாட்ஸ்அப் DPஐ ஏன் பார்க்க முடியவில்லை...? 

14 சித்திரை 2024 ஞாயிறு 13:29 | பார்வைகள் : 470


வாட்ஸ்அப்பில் தொடர்பில் உள்ள சிலரின் Profile Photoவை, சில சமயங்களில் ஏன் பார்க்க முடியவில்லை என்பதற்கான காரணங்கள் குறித்து இங்கே காண்போம்.

சிலர் தங்கள் யாரும் தங்கள் DPஐ பார்க்க முடியாதபடி Settingsயில் மாற்றி அமைத்திருக்கலாம்.

உங்கள் மொபைல் எண்ணை அவர்கள் தங்கள் போனில் சேமித்து வைக்கவில்லை என்றால், அவர்களின் DPஐ நீங்கள் பார்க்க முடியாது.

அதேபோல் அவர் தனது DPஐ, தனது போனில் சேமித்து வைத்துள்ள எண்களுக்கு மட்டும் தெரிவது போல் வைத்திருக்கலாம். 

உங்களது செல்போன் எண்ணை அவர்களின் போனில் இருந்து நீக்கியிருக்கலாம், உங்களுக்கு தெரிந்த DP எண் நீக்கத்திற்கு பின்னர் நீங்கள் பார்க்க முடியாமல் போய்விடும்.

குறித்த நபர் தனது DPஐ நீங்கள் மட்டும் பார்க்க முடியாதபடி மறைத்து வைத்திருக்கலாம். அதாவது, உங்கள் எண்ணை அவரின் மொபைலில் இருந்து நீக்காமல், DPஐ மட்டும் பார்க்க அனுமதிக்கவில்லை.

உங்களது எண்ணை குறித்த நபர் Block செய்து வைத்தால் அவர்களின் DPஐ நீங்கள் பார்க்க முடியாது.

குறித்த நபர் DP வைக்க விருப்பமில்லாமல் நீக்கியிருந்தால் உங்களுக்கு Empty ஆக காட்டும்.

குறித்த நபர் தனது வாட்ஸ்அப் கணக்கையே நீக்கியிருந்தால், அவரது DPஐ நீங்கள் பார்க்க முடியாமல் போகலாம். அதாவது அவர் தனது கணக்கை Deactivate செய்திருக்கலாம். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்