இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலை வருமானம் அதிகரிப்பு
14 சித்திரை 2024 ஞாயிறு 12:06 | பார்வைகள் : 1048
இலங்கையில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் கிடைத்த வருமானம் 126 மில்லியன் ரூபா என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இந்த வருமானம் கிடைத்துள்ளது.
குறித்த காலப்பகுதியில் 366,000 வாகனங்கள் நெடுஞ்சாலைகளில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை செயல்பாடுகள் பராமரிப்பு மற்றும் மேலாண்மைப் பிரிவின் பணிப்பாளர் ஆர். ஏ. டி. கஹடபிட்டிய தெரிவித்திருந்தார்.