உலகப்போர் ஏற்படும் அபாயம் - எச்சரித்த டிரம்ப் எச்சரிக்கை
14 சித்திரை 2024 ஞாயிறு 10:27 | பார்வைகள் : 3460
இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலால் உலகப்போர் அபாயம் ஏற்படும் என அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் முன்னர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டமாஸ்கஸில் உள்ள ஈரான் தூதரகத்தின் மீது இஸ்ரேலிய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம்சாட்டியது.
அத்துடன் இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கிய ஈரான், கிட்டத்தட்ட 200 ராக்கெட்டுகள் மற்றும் ட்ரோன்களை ஏவியுள்ளது.
இந்த தாக்குதலில் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்துள்ளது. ஈரானின் நடவடிக்கைக்கு ஜேர்மனி, அமெரிக்கா ஆகிய நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
முன்னதாக, அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம், ''இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான உச்சகட்ட பதற்றம் உலகப்போராக மாறும் அபாயம் இருக்கிறது. இஸ்ரேலில் என்ன நடக்கிறது என்பது உலகப்போரில் முடிவடையும்'' என்றார்.
மேலும் அவர் அமெரிக்க தேர்தல் குறித்து பேசுகையில், 'அமெரிக்காவுக்கு இது மிகவும் ஆபத்தான காலகட்டம். அமெரிக்காவில் நவம்பர் 5ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடப்பதற்கு முன்பாக, அதுவும் குறிப்பாக தற்போது உள்ள திறமையற்ற தலைவர்களின் ஆட்சியில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்' என தெரிவித்தார்.
டொனால்டு டிரம்ப் இஸ்ரேல்-ஈரான் மோதல் குறித்து எச்சரித்த நிலையில் தாக்குதல் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.