சுண்டைக்காய்க்குள் மறைந்திருக்கும் ரகசியம். தெரியுமா?
12 சித்திரை 2024 வெள்ளி 10:50 | பார்வைகள் : 1904
சுண்டைக்காய் கசப்பாகத்தான் இருக்கும் என்றாலும் அதன் நன்மைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தருகின்றன என்பதை மறவாதீர்கள். சிலருக்கு பசி உணர்வே இல்லை எனில் அது உடல் நலனின்மையின் அறிகுறியாகும். எனவே அதை உடனே சரி செய்யும் வேலையில் இறங்க வேண்டும்.
அந்த வகையின் சுண்டைக்காய் உங்கள் பசியை தூண்டுவதில் சிறப்பாக செயலாற்றுகிறது. எனவே சுண்டைக்காயை வாரம் ஒரு முறையேனும் சமைத்து சாப்பிட வேண்டும். கால்சியம் சத்து சுண்டைக்காயில் அதிகமாக கிடைக்கிறது. எனவே எலும்பு தேய்மானம், எலும்பின் உறுதித்தன்மையை இழக்காமல் இருக்க சுண்டைக்காயை சாப்பிடுங்கள். இது உங்களுக்கு எதிர்கலத்தில் எலும்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்க உதவும்.
சுண்டைக்காய்க்கு சளியை போக்கும் தன்மை உள்ளது. குறிப்பாக நெஞ்சு சளியை எடுக்கும் ஆற்றலும் சுண்டைக்காய்க்கு உண்டு. எனவே பிஞ்சு சுண்டைக்காய்களை குழம்பு அல்லது துவையல் வைத்து சாப்பிடுங்கள். சுண்டைக்காய் குழம்பு வைத்து நிறைய சுண்டைக்காயை எடுத்து சாதத்தில் நன்கு பிசைந்து சாப்பிட்டுப்பாருங்கள். உங்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனை குறையலாம். மலச்சிக்கல் பொதுவாக உடல் உஷ்ணம் காரணமாகவும் ஏற்படலாம். எனவே அதை சரி செய்ய உதவும் ரகசியம் சுண்டைக்காயில் இருக்கும். கிராமங்களில் எளிதில் கிடைக்கும் அருமருந்து தான் சுண்டகாய்.