Paristamil Navigation Paristamil advert login

Electric Scooters வைத்திருப்போர் கவனத்திற்கு.., மின்சார விபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை

Electric Scooters வைத்திருப்போர் கவனத்திற்கு.., மின்சார விபத்தை தவிர்க்க நீங்கள் செய்ய வேண்டியவை

11 சித்திரை 2024 வியாழன் 09:55 | பார்வைகள் : 547


Electric Scooters -ஆல் நிகழும் பெரும் விபத்துகளை தவிர்ப்பதற்கான சில முன்னெச்சரிக்கை விடயங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

தற்போதைய காலத்தில் Electric Scooters -ன் விலை குறைவாக இருப்பதாலும், பெட்ரோல் போடுவதற்கு அவசியம் இல்லை என்பதாலும் பெரும்பாலான மக்கள் இதனையே தேர்வு செய்கின்றனர். Electric Scooters -ன் பயன்பாடு அதிகளவிலே உள்ளது.

இது ஒருபுறம் இருந்தாலும் Electric Scooters -ஆல் ஏற்படும் மின்சார தீ விபத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. Battery Management System, IP67 தர ரேட்டிங் என்ற சோதனைகள் செய்து Electric Scooters தயார் செய்திருந்தாலும் நம்முடைய ஊர்களின் வெப்பத்திற்கு ஏற்ப செயல்படுவதற்கு சிரமம் தான்.

அதுமட்டுமல்லாமல் சார்ஜிங் செய்யும் போது மின்சார தீ விபத்துக்களும் நடந்த வண்ணம் இருக்கின்றன. இதனை தவிர்ப்பதற்காக சில விடயங்களை நாம் பின்பற்ற வேண்டும்.

* உங்களுடைய எலெக்ட்ரிக் வாகனத்தில் உள்ள battery -யில் Auto cut option இருந்தாலும் இரவு முழுவதும் Charge செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் Battery bulge ஆகி வெடித்துவிடும்.

* எலெக்ட்ரிக் வாகனகத்தை சார்ஜ் ஏற்றுவதற்கு உற்பத்தியாளர்கள் கொடுத்த வயரை மட்டுமே பயன்படுத்துங்கள்.


* Extension box அல்லது சாதாரண Plug பாயிண்டில் சார்ஜ் ஏற்றுவதை தவிர்த்து விடுங்கள். Authorized நிறுவனத்தில் உள்ள Charging station -களில் சார்ஜ் ஏற்றுங்கள். இது தினமும் முடியவில்லை என்றாலும் அவ்வப்போது பயன்படுத்துங்கள்.

* சார்ஜிங் செய்யும் போது வெளியில் வைத்து பார்த்துக் கொள்ளுங்கள். சில வாகனங்களில் Detached battery இருந்தால் வீடுகளில் வைத்து சார்ஜ் செய்யும் போது கவனம் தேவை.

* உங்கள் வீடுகளில் பழைய லித்தியம் அயன் பேட்டரிகளை வைத்திருக்க வேண்டாம்.


* நேரடி சூரியஒளி படும்படியான இடங்களில் சார்ஜ் ஏற்றுவதை தவிருங்கள்.


* Smoke detectors என்னும் அலாரத்தை பயன்படுத்தினால், தீ விபத்துக்கான அறிகுறி ஏற்பட்டால் முன்னெச்சரிக்கை காட்டும்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்