Paristamil Navigation Paristamil advert login

திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஆர்வி உதயகுமார் தேர்வு ?

 திரைப்பட இயக்குனர்கள் சங்கத் தலைவராக ஆர்வி உதயகுமார் தேர்வு ?

4 பங்குனி 2024 திங்கள் 14:45 | பார்வைகள் : 3508


தமிழ் சினிமாவில் உள்ள சங்கங்களில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கம் ஆகியவை நீண்ட காலமாக இருக்கும் முக்கியமான சங்கங்கள்.

தற்போதுள்ள தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில் அடுத்த நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் மார்ச் 16ம் தேதி நடைபெற உள்ளது.

ஆனால், தேர்தலுக்கு முன்பே சில முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியின்றி தேர்வு நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது. தலைவராக ஆர்வி உதயகுமார், செயலாளராக பேரரசு, பொருளாளராக சரண் ஆகியோரைத் தேர்வு செய்துள்ளார்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது. துணைத் தலைவர், துணைச் செயலாளர், செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் மட்டுமே நடைபெற உள்ளது.

இதுவரை தலைவராக இருந்து வந்த இயக்குனர் ஆர்கே செல்வமணி அடுத்த நிர்வாகத்திற்கு போட்டியிடப் போவதில்லை என ஏற்கெனவே அறிவித்துவிட்டாராம்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்